♪♫
TA-1257
Tamil
தேவ தேவா! திரியேக தேவா!
Deva Devaa Thiriyega Deva
14
views
1ம் சரணம்
தேவதேவன் பாலகனாய்த் தேவ கோலம் துறந்தவராய் மானிடரின் சாபம் நீக்க மாநிலத்தில் அவதரித்தார் அல்லேலூயா ! அல்லேலூயா ! அற்புத பாலகன் இயேசுவுக்கே
2ம் சரணம்
பரம சேனை இரவில் தோன்றி பாரில் பாடி மகிழ்ந்திடவே ஆ நிரையின் குடில் சிறக்க ஆதவனாய் உதித்தனரே
3ம் சரணம்
ஆயர் மனது அதிசயிக்க பேயின் உள்ளம் நடுநடுங்க தாயினும் மேல் அன்புள்ளோராய் தயாபரன் தான் அவதரித்தார்
4ம் சரணம்
லோகப் பாவம் சுமப்பதற்கோ தாகம் தீர்க்கும் ஜீவ ஊற்றே வேதம் நிறைவேற்றுதற்கோ ஆதியாக அவதரித்தீர்
5ம் சரணம்
தாரகையாய் விளங்கிடவோ பாரில் என்னை நடத்திடவோ ஆருமில்லா என்னைத் தேடி அண்ணலே நீர் ஆதரித்தீர்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.