♪♫
TA-1262
Tamil
தேவா இந்த நாளில் என்னை நடத்திடுங்க
Deva Intha Naalil
0
views
பல்லவி
தேவா, இரக்கம் இல்லையோ? – இயேசு தேவா, இரக்கம் இல்லையோ? ஜீவா, பரப்ரமஏ கோவா, திரித்துவத்தின் மூவாள் ஒன்றாக வந்த தாவீதின் மைந்தன் , ஒரே
1ம் சரணம்
எல்லாம் அறிந்த பொருளே – எங்கள் இல்லாமை நீக்கும் அருளே – கொடும் பொல்லா மனதுடைய கல்லான பாவிகளைக் கொல்லாதருள் புரியும் நல்லாயன் யேசுநாதர்!
2ம் சரணம்
எங்கும் நிறைந்த ஜோதியே – ஏழைப் பங்கில் உறைந்த நீதியே – எங்கள் சங்கடமான பாவ சங்கதங்களை நீக்கும் துங்க இசரவேலின் வங்கிஷ க்ரீடாபதி !
3ம் சரணம்
வேதாந்த வேத முடிவே – ஜெக ஆதாரம் ஆன வடிவே – ஐயா, தாதாவும் எமைப் பெற்ற மாதாவும் நீயே – யேசு நாதா, ரட்சியும், வேறே ஆதாரம் எமக்கில்லை