TA-1264
Tamil

வானம் பூமி ஆளும் தேவன்

Deva Janamae Paadi Thuthipom

0
views
பல்லவி

தேவ ஜனமே பாவத்தில் விழுந்தே தேவ கிருபை பெலன் - இழந்ததே தேடி மீட்டிடும் - என் இயேசுவே

1ம் சரணம்

ஆதி அன்பெல்லாம் வாழ்வில் குறைந்தே ஆடம்பரம் நிறைந்தே - பின் மாறினர் மங்கும் திரிகளெல்லாம் அணையுதே மனதுருகிடுமே

2ம் சரணம்

தியாகம், எளிமை, தாழ்மை மறந்தே சிநேகம், உலகினிலே - செலுத்தினர் ஆதி பிரதிஷ்டைகளும் உடைந்ததே ஜோதி மங்கிடுதே.

3ம் சரணம்

கள்ளங்கபட வேலையாட்கள் கால்கள் அலைந்திடுதே - கெடுத்திட நித்ய சுவிசேஷ நன்மைக்குத்தான் நிதமும் தூஷணமே

4ம் சரணம்

அந்தி கிறிஸ்து அற்புதங்களால் மந்தையைக் கலக்கி - வஞ்சிக்கவே தேவன் தெரிந்தெடுத்த பேதைகளும் தவறி செல்கின்றனர்

5ம் சரணம்

ஸ்திரீயாம் சபையின் ஆண்பிள்ளைதனை தீவிரம் விழுங்க - நின்றிடுதே பாவ வலு சர்ப்பம் வால் சுழன்றே பிளந்து வாய் திறந்தே

6ம் சரணம்

வல்லமை மிகும் ஏசு நாமம் கொல்லும் சாத்தானையும்-பெலமுடன் கர்த்தர் கடிந்து கொள்வீர் பிசாசை காலின் கீழ் மிதிப்பீர்

7ம் சரணம்

நல் விஸ்வாசம் காணப்படுமோ நேசர் வருகையிலே - எப்படியும் உந்தன் மணவாட்டி சபைதனை உயிர்ப்பித்தே அழைப்பீர்