TA-1268
Tamil

தேவ மைந்தன் உன்னை இரட்சிக்க

Deva Mainthan Unnai Ratchika

16
views
பல்லவி

தோன்றினாரே தாழ்மையின் உருவாய் தூயராம் தீர்க்கர் உரைப்படியே ஆனந்தமாய் நாம் ஆர்ப்பரிப்போம் அல்லேலூயா ! மகிமை அற்புதர் இயேசுவுக்கே

1ம் சரணம்

ஞானம் நீதி பரிசுத்தம் மீட்பும் ஆன திரு சுதனே வானவரின் சாயல் நாம் அணிய மானிட ரூபம் தரித்தவரே

2ம் சரணம்

பாவம் போக்கும் பலியாக தமையே பாரினில் ஈந்தனரே மாநிலத்தோர் வானிலத்தோர் மகிழ்வுடன் வணங்கிடும் நாமமுள்ளோர்

3ம் சரணம்

பேயின் சக்தி மாய்த்திட தேவ சேயன் மரித்தாரே தியாகத்தின் மா மேன்மையின் உயர்வை நாயகன் நானிலம் அறியச் செய்தார்

4ம் சரணம்

அல்லேலூயா மகிமையும் கனமும் ஆளுகையும் இவர்க்கே ஆசையுடனே பணிந்திடுவோமே அதிசயமாய் நம்மை மீட்டவரேptE1 தேவ மைந்தன் இயேசு கிறிஸ்து துதிக்குப் பாத்திரரே தோன்றினாரே தாழ்மையின் உருவாய் தூயராம் தீர்க்கர் உரைப்படியே ஆனந்தமாய் நாம் ஆர்ப்பரிப்போம் அல்லேலூயா மகிமை அற்புதர் இயேசுவுக்கே 2 ஞானம் நீதி பரிசுத்தம் மீட்பும் ஆன திரு சுதனே வானவரின் சாயல் நாம் அணிய மானிட ரூபம் தரித்தவரே 3 பாவம் போக்கும் பலியாக தமையே பாரினில் ஈந்தனரே மாநிலத்தோர் வானிலத்தோர் மகிழ்வுடன் வணங்கிடும் நாமமுள்ளோர் 4 பேயின் சக்தி மாய்த்தி

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.