TA-1273
Tamil

தேவ பக்தி ஓர் இரகசியம்

Deva pakthi

16
views
பல்லவி

தேவா பிரசன்னம் தாருமே தேடி உம் பாதம் தொழுகிறோம் இயேசுவே உம் திவ்ய நாமத்திலே இன்பமுடன் கூடி வந்தோமே

1ம் சரணம்

வானம் உமது சிங்காசனம் பூமி உமது பாதஸ்தலம் பணிந்து குனிந்த தொழுகிறோம் கனிந்தெம்மைக் கண்பாருமே

2ம் சரணம்

சாரோனின் ரோஜா லீலி புஷ்பம் சாந்த சொரூபி என் இயேசுவே ஆயிரம் பேரிலும் சிறந்தோராம் ஆண்டவரைத் தொழுகிறோம்

3ம் சரணம்

கர்த்தர் செய்த உபகாரங்கள் கணக்குரைத்து எண்ணலாகுமோ இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி இரட்சகரைத் தொழுகிறோம்

4ம் சரணம்

கர்த்தர் சமூகம் ஆனந்தமே பக்தர் சபையில் பேரின்பமே கர்த்தர் நாமத்தைக் கொண்டாடுகிறோம் சுத்தர்கள் போற்றும் தேவனே

5ம் சரணம்

நூற்றிருபது பேர் நடுவே தேற்றரவாளனே வந்தீரே உன்னத ஆவியை ஊற்றிடுமே மன்னவனே இந்நேரமே

6ம் சரணம்

எப்போ வருவீர் என் இயேசுவே ஏங்கி உள்ளம் உம்மைத் தேடுதே பறந்து விரைந்து தீவிரமே இறங்கி வாரும் இயேசுவே

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.