வீணைகள் கைகளில்
Deva Sabaiyile Devan
தேவ சாயல் ஆக மாறி தேவனோடிருப்பேன் - நானும்
அந்தநாளும் நெருங்கிடுதே அதி விரைவாய் நிறைவேறுதே மண்ணின் சாயலை நான் களைந்தே-தம் விண்ணவர் சாயல் அடைவேன்
பூமியின் கூடாரம் என்றும் பெலவீனமே அழிந்திடுமே கைவேலையல்லாத பொன் வீடு கண்டடைந்து வாழ்ந்திடுவேன்
சோரும் உள்ளான மனிதன் சோதனையில் பெலமடைய ஆற்றி தேற்றிடும் தேற்றரவாளன் ஆண்டவர் என்னோடிருப்பார்
ஆவியின் அச்சார மீந்தார் ஆயத்தமாய் சேர்த்திடவே ஜீவனே எனது கிறிஸ்தேசு சாவு எந்தன் ஆதாயமே
காத்திருந்து ஜெபிப்பதினால் கழுகுபோல பறந்தெழும்பி ஜீவ யாத்திரை ஓடி முடித்து ஜீவக்கிரீடம் பெற்றிடுவேன்
மூன்றில் ஒன்றாய் ஜொலிப்பவரை முகமுகமாய் தரிசித்திட வாஞ்சையாய்த் தவிக்கும் எனதுள்ளம் வாரும் என்று கூப்பிடுதே
உன்னத சீயோன் மலைமேல் என தருமை ஏசுவுடன் ஜெப வீட்டினிலே மகிழ்ந்தே நான் ஜீவிப்பேனே நீடூழியாய்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.