♪♫
TA-1282
Tamil
Deva Suthan Thanthaar
Deva Suthan Thanthaar
12
views
பல்லவி
தேவா உம் நாமத்தைப் பாடிப் புகழுவேன் ஆனந்தம் ஆனந்தமே நீர் செய்த நன்மைகள் ஆயிரமாயிரம் ஆனந்தம் ஆனந்தமே ஏழைகளின் தேவனே எளியோரின் இராஜனே திக்கற்ற பிள்ளைகளின் தேவனே
1ம் சரணம்
கேரூபீன் சேராபீன்கள் ஒய்வின்றிப் பாடிப்போற்ற துதிக்குப் பாத்திரரே துதிகளின் மத்தியில் வாசம் செய்திடும் மகிமைக்குப் பாத்திரரே
2ம் சரணம்
காற்றையும் கடலையும் அடக்கி அமர்த்திய அற்புத தேவன் நீரே அக்கினி மதிலாய் நடுவில் வாசம் செய்யும் அதிசய தேவன் நீரே
3ம் சரணம்
வியாதிகள் முழங்கால்கள் முடங்கிப் பணிந்திடும் உன்னத தேவன் நீரே நாவுகள் யாவுமே அறிக்கை செய்திடும் உத்தம தேவன் நீரே
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.