TA-1287
Tamil

தேவா உம்மைபோல மாற்றுமே

Deva ummai poola

0
views
பல்லவி

தேவா உந்தன் சமூகம் தெளிதேனிலும் மதுரமே – 2 உந்தன் சமூகமே எனது விருப்பம் அதில் வாழ்வதை விரும்புவேன் உந்தன் சமூகமே எனது புகலிடம் அதை என்றும் நான் வாஞ்சிக்கிறேன் தேவா என்றும் உந்தன் சமூகம் வேண்டுமே – 2 உந்தன் சமூகம் என் வாஞ்சையே உந்தன் சமூகம் என் மேன்மையே – 2

1ம் சரணம்

ஆயிரம் நாளைப் பார்க்கிலும் அதில் ஒருநாள் நல்லது என் ஆனந்தம் இளைப்பாறுதல் அதில் தான் உள்ளது – 2

2ம் சரணம்

நேரங்கள் கடக்கும் போதிலும் அதில் வெறுப்பொன்றும் இல்லயே கோடியாய் பொன்கள் கிடைப்பினும் அதற்கீடொன்றும் இல்லையே – 2