தேவா என்னைப் படைக்கிறேன்
Devaa Ennai Padaikkirean
தேவா, திருக்கடைக்கண் பார், ஐயா! வினைதீர், ஐயா, வினைதீர், ஐயா. கோவாய் உலகில் வந்த யோவா, சச்சிதானந்தா! – தேவா
மேவிய தயை நிரம்பி, ஆவலுடனே விரும்பி, பாவி எனையே திரும்பிப் பார், ஐயா, ஸ்வாமி! – தேவா
பொல்லா உலகம் பகை, எல்லாச் செல்வமும் புகை; வல்லா, உனின் கிருபை கூர், ஐயா, ஸ்வாமி. – தேவா
அந்தி சந்தியும் விடாமல், தந்திரப் பசாசடாமல், எந்த விதமும் கெடாமல் ஆளுமே, ஸ்வாமி! – தேவா
சர்ப்பனை[1] யதாய் உலகம் இப்படித் துரோகம் செய்தால், எப்படி அடிமை கரை யேறுவேன், ஸ்வாமி! – தேவா
எத்தனை துயர் அடைந்தேன்! மெத்தவும் மன துடைந்தேன்; சித்தம் இரங்காய், என் மணவாளனே, ஸ்வாமி! – தேவா
இந்தத் தினத்தில் எனக்குத் தந்த சுகத்துக்குனக்கு வந்தனம்! அனந்தனந்தம் ஸ்தோத்திரமே, ஸ்வாமி! – தேவா
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.