தேவா, திருக்கடைக்கண் பார், ஐயா!
Devaa Thirukadaikan Paar
தேவாதி தேவன் ராஜாதி ராஜன் பாவ உலகினில் வந்துதித்தார் ஏரோது மாளிகை தேடாத மா ராஜன் ஏழை தொழுவத்தில் ஜெனித்தவர்
வானத்தில் தோன்றும் ஓர் நட்சத்திரம் வான சாஸ்திரிகள் முன்னிலை சென்றாலும் பாதை தவறியதே சோகமடைந்த பின் பாலகன் இயேசுவை கண்டடைவோம்
அன்னை மரியாள் அளவில்லாத ஆசீர்வாதங்கள் மிக அடைந்தாள் அந்த கிருபைகள் சொந்தமுடன் பெற ஆண்டவர் இயேசுவை கண்டடைவோம்
சத்திரத்திலே ஸ்தலமில்லையே சத்திய தேவன் தலை சாய்க்கவே தாழ்மை சொரூபியே தாழ இறங்கியே தாங்கும் இடத்தை கண்டடைவோம்
ஆண்டவர் பிறந்த பெத்தலகேம் ஆயிரங்களில் சிறிய இஸ்தலம் இஸ்ரவேல் ராஜனை இம்மானுவேலனை இன்பமுடன் தேடி கண்டடைவோம்
கண்ணார கண்டேன் உன் இரட்சண்யத்தை காலா காலமாக காத்திருப்பேன் என்றும் சிமியோன் தன் கையில் எடுத்து நம் இயேசுவை வாஸ்க்ஹ்த்தியே கண்டடைந்தான்
தள்ளின கல்லால் தலைக்கல்லாக தாமதமின்றி வருகின்றனர் ஆயர் குடிலிடை பாலனாய் தோன்றும் தூய பிதா முகம் கண்டடைவோம்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.