♪♫
TA-1291
Tamil
தேவன் ஆராதனைக்குரியவரே
Devan Aarathanaikuriyavare
16
views
பல்லவி
தேவன் அருளிய சொல்லி முடியாத ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் கோடா கோடி ஸ்தோத்திரம்
1ம் சரணம்
கிருபையினாலே விசுவாசம் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்களே இது உங்களாலே உண்டானதல்ல தேவன் தந்த நல்ல ஈவே
2ம் சரணம்
உலர்ந்து போன எலும்புகளெல்லாம் உயிர்ப்பிக்கும் வல்ல ஆவியே இது இருதயத்தின் அன்பின் ஆவியே தேவன் தந்த நல்ல ஈவே
3ம் சரணம்
குடும்ப வாழ்விலும் சந்தோசமாய் குறைவில்லாது நடத்துகின்றரே நல்ல புத்தியுள்ள மனைவி எல்லாம் தேவன் தந்த நல்ல ஈவே
4ம் சரணம்
ஒவ்வொரு நாளும் நாம் அனுபவித்திட நன்மைகளைத் தருகின்றரே இது தேவன் தரும் ஆசிர்வாதமே தேவன் தந்த நல்ல ஈவே
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.