TA-1294
Tamil

கூளிச் சிரசை நசுக்கவும்

Devan Manithanaai Aaaginaar

15
views
பல்லவி

.பயப்படாதே நான் உன் தேவன் கலங்கிடாதே நான் உன் தேவன் தாங்கி சுமப்பேன் நான் உன் தேவன் ஆபிரகாம் ஈசாக்கின் யாக்கோபின் தேவன் நான் உன் தேவன் உன் சொந்தம் உன்னோடிருக்கின்றேன்

1ம் சரணம்

பேர் சொல்லி நான் உன்னை அழைத்தேன் பார் இதோ நான் உன் பக்கம் நிற்கின்றேன் என்றுரைத்து ஏசழைத்தார் அன்போடவரை சேவிப்பேன்

2ம் சரணம்

உந்தன் அழைப்பை உறுதிப்படுத்து உந்தன் ஜெபத்தை நீ பெலப்படுத்து உன் விசுவாசத்தை காத்து ஸ்திரப்படுத்து உன் அழைப்பை நீ இடறாமல் நிறைவேற்றுவாய்

3ம் சரணம்

அப்பா பிதாவே உம்மை நேசிப்பேன் என் இன்ப இயேசுவே நான் உம்மை நேசிப்பேன் அன்பின் தூய ஆவியானவரே உம்மை நேசிப்பேன் பிதா குமாரன் பரிசுத்த ஆவி திருத்துவ தேவனை சேவிப்பேன்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.