TA-1297
Tamil

தேவனே என் நண்பனே

Devana En Nanbane

0
views
பல்லவி

தேவனே என் அடைக்கலம் நீரே இயேசுவே, என் பெலனும் நீரே துதித்து (-4) துதித்து பாடுவேன்-2 மகிழ்ந்து (-4) போற்றி பாடுவேன்-2

1ம் சரணம்

ஆபத்து காலத்தில்கூட இருந்து காத்து வந்தீரே-2 அனுகூலமாக எனக்கு துனை நின்றீரே-2

2ம் சரணம்

தேவனுடைய நகரத்திலே ஓர் நதியுண்டு -2 உன்னத மக்களின் கூடாரத்தை மகிழ்ச்சியாக்கிடும்-2

3ம் சரணம்

சேனைகளின் தேவன் நம் நடுவில் இருக்கிறார் -2 அதிகாலை நேரம் நமக்கு துணை செய்கிறார்-2

4ம் சரணம்

சண்டைகளை தடுத்து தேவன் ஓயப்பண்ணுகிறார்-2 சமாதானம் தந்து நம்மை மகிழப் பண்ணுகிறார் -2

5ம் சரணம்

தேவபாதம் அமர்ந்திருந்து அறிந்து கொள்வோம்-2 இயேசுவே தேவன் என்று உணர்ந்து கொள்ளுவோம் -2