TA-1313
Tamil

Devvan Alukirar

Devvan Alukirar

18
views
பல்லவி

தாசனாகிய யாக்கோபே பயப்படாதே திகையாதே

1ம் சரணம்

உனக்கு முன்பாக நான் செல்வேன் வழிகள் செவ்வையாக்குவேன் இதுவரையிலும் காத்திட்டேன் இனியும் காத்திடுவேன் மறைவிலிருக்கும் பொக்கிஷங்களை உனக்கு தந்திடுவேன்

2ம் சரணம்

வலக்கரத்தினால் தாங்கிடுவேன் பெலனை கொடுத்திடுவேன் வறண்ட நிலத்தின் மேல் ஆறுகளை ஓடச்செய்வேன் உன் மேல் ஆவியும் ஆசீர்வாதமும் ஊற்றிடுவேன்

3ம் சரணம்

தாயைப் போல தேற்றிடுவேன் தந்தை போல் அணைத்திடுவேன் கால்கள் கல்லில் இடராமல் கருத்தாய் காத்திடுவேன் நினைத்திடாத அளவிற்கு நான் உன்னை உயர்த்திடுவேன்

4ம் சரணம்

ஆறுகளை நீ கடக்கையிலே உன்னோடு நான் இருப்பேன் அக்கினி ஜுவாலை உன்னைப் பற்றாமல் காத்துக் கொள்வேன் உனக்கு எதிராய் எழும்புவோரை நானே சிதறடிப்பேன்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.