♪♫
TA-1314
Tamil
திவ்விய ஐக்கியத்தில் நடப்போமேயாகில்
Dheviya Ikkiyathil
0
views
பல்லவி
தினமே நானுனைத் தேடிப்பணியச் செயும்துணையே நித்ய ஏக தெய்வமே. மனநிலை தவறி மருகினேன் நானே மாசிலானே அனுகூலநற் கோனே- தின
1ம் சரணம்
அருள் நாயகனே அம்பரத் தீசா ஆதியாய் நின்றபேர் அருள்நிறை பாசா மருள்பவ நாசா மனுக்குல ராசா மகிமை யடைந்தமா மகத்துவ நேசா!- தின
2ம் சரணம்
செத்தேன் எனக்குன் ஜீவன் அளித்தாய் தீயனென் மேல் திருத் தீர்த்தம் தெளித்தாய் முத்தே யென் நன்மைக் காக மரித்தாய் மோதிய தீவினை யாவும் அழித்தாய்.- தின
3ம் சரணம்
திரளென் பாவங்கள் தீர்த்திட வாராய் தீமை மறந்துநான் சீர்பெறக் கூராய் கரள் குணமாற்றிக் கனிதெனைச் சேராய் களிப்புடன் பாடிடக் கறுணைக்கண் பாராய்.- தின