TA-1317
Tamil

என்னை முற்றுமே இந்த நேரத்தில்

Dhivya Anbin Sathathai

15
views
1ம் சரணம்

திவ்ய மைந்தன் பிறந்தீரே, கன்னிமாதின் பாலகா; நீச கோலம் எடுத்தீரே, மனுக்குல மீட்பரே .

2ம் சரணம்

பாவ மாந்தர் மீட்புக்காக வான மேன்மை வெறுத்தீர்; நேச நாதா தாழ்மையாக மண்ணில் தோன்றி ஜென்மித்தீர்.

3ம் சரணம்

லோக ராஜா, வாழ்க! வாழ்க! செங்கோல் தாங்கும் அரசே! பூமியெங்கும் ஆள்க! ஆள்க! சாந்த ப்ரபு யேசுவே!

4ம் சரணம்

தேவரீரின் ராஜ்யபாரம் நித்ய காலமுள்ளது; சர்வ லோக அதிகாரம் என்றும் நீங்கமாட்டாது.

5ம் சரணம்

வல்ல தேவனைப் பணிந்து ஏக வாக்காய்ப் போற்றுவோம், நித்திய பிதாவை என்றும் பக்தியை வணங்குவோம்.

6ம் சரணம்

ஸ்தோத்திரம், கர்த்தாதி கர்த்தா ஞானத்துக் கெட்டாதவர்! ஸ்தோத்திரம் ராஜாதி ராஜா ஆதியந்தமற்றவர்!

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.