TA-1319
Tamil

Dinam dinam

Dinam dinam

12
views
பல்லவி

தினம் தினம் ஸ்தோத்திரம் பாடும் - மணம் தேவனைத் தேடும் - திருமுகம் காணும் புதுகவி பொங்கும் இயேசுவைப் புகழ்ந்திடும் புது பெலத்தால் உள்ளம் நிரம்பிடும் நேரம்

1ம் சரணம்

கர்த்தரின் அருளே நித்திய பொருளே காத்திருந்தாலே கிடைத்திடுதே கழுகுபோல் மேலே பறந்திடும் ஆத்மா கண்டிடுதே மெய் மாட்சிமைக் காட்சி

2ம் சரணம்

மாறிடும் மனமே தேறிடும் குணமே மேசியா ஈவே மறுபிறப்பே பரலோக ஆசீர் பரிசுத்த ஆவி பக்தர்கள் மீதே பொழிந்திடும் மாரி

3ம் சரணம்

பூவுலகின்பம் பூவைப்போல் வாடும் பார்த்தறிந்தோரே வெறுத்திடுவார் இரட்சண்ய வாழ்வே நீடூழி நிலைக்கும் இயேசுவின் அன்பே தேனிலும் இன்பம்

4ம் சரணம்

வானமும் பூமி சர்வ சிருஷ்டியும் வாஞ்சையுடனே காத்திருக்கும் சுடர் ஒளி இயேசு தோன்றிடும் நாளே சிந்தனை தங்கும் எந்தனைத் தேற்றும்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.