அலைகள் மோதி எதிர்வந்தாலும்
Ekkaalathum Karthar Yesuvai
எக்காள தொனியோடு இயேசு மேகத்தில் வந்திடுவார் அந்நிய கண்கள் அல்ல என்கண்களே அன்பின் இயேசுவை கண்டு பூரிக்கும்
வானாதி வானங்களின் வழியே வேந்தன் கிறிஸ்து வந்திறங்க பரிசுத்தவான்களை அன்போடணைத்து பரலோகம் சேர்த்துக் கொள்வார்-நம்மை
லோத்தின் மனைவி போல் மாறாமல் லோகத்தைத் திரும்பிப் பாராமல் பரலோகப் பயணம் பரதீசை நோக்கி புறப்பட ஆயத்தமா? - நாம்
வீசிடும் விண்ணொளி வழிகாட்டும் காசினியைக் கடந்து செல்வோம் நேசிக்கும் இயேசுவை எதிர்கொண்டு சேர்வோம் மாசில்லா பொன் நகரம் - ஆ
புது வானம் பூமி படைத்திடுவார் புவி ஆள வருவார் ராஜன் இயேசு இப்போதிருக்கும் பொல்லாத பிரபஞ்சம் அப்போது அழிந்திடுமே - ஆமென்
நித்திய ஜீவனைத் தந்தாரே நித்தியம் நித்தியம் வாழுவோம் விண் வாசஸ்தலங்கள் இன்பமானவைகள் கண்ணாரக் கண்டு களிப்போம்-அதைக்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.