♪♫
TA-1334
Tamil
எக்காளம் ஊதிடுவோம்
Ekkalam oothiduvom
15
views
பல்லவி
எக்காள சத்தம் வானில் தொனித்திடவே எம் இயேசு மா இராஜனே வந்திடுவார்
1ம் சரணம்
அந்த நாள் மிக சமீபமே சுத்தர்கள் யாவரும் சேர்ந்திடவே தேவ எக்காளம் வானில் முழங்க தேவாதி தேவனை சந்திப்போமே
2ம் சரணம்
வானமும் பூமியும் மாறிடினும் வல்லவர் வாக்குதாம் மாறிடாதே தேவதூதர் பாடல் தொனிக்க தேவன் அவரையே சந்திப்போமே
3ம் சரணம்
கண்ணிமை நேரத்தில் மாறிடுவோம் விண்ணிலே யாவரும் சேர்ந்திடுவோம் கண்ணீர் கவலை அங்கே இல்லை கர்த்தர் தாமே வெளிச்சமாவர்
4ம் சரணம்
கர்த்தரின் வேளையை நாம் அறியோம் கர்த்தரின் சித்தமே செய்திடுவோம் பலன்கள் யாவையும் அவரே அளிப்பார் பரமனோடென்றும் வாழ்ந்திடுவோம்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.