TA-1335
Tamil

எக்காள சத்தம் வானில் தொனிக்க

Ekkalam Sattham Vaanil thonikka

16
views
பல்லவி

எக்காளம் தொனிக்க ஏசு வந்திடுவார் எண்ணில்லா தூதர்கள் சூழ்ந்திடவே என்ன பேரானந்தமே அன்று

1ம் சரணம்

மரித்த பக்தர்கள் மகிமையாய் எழும்பி மன்னன் இயேசுவோடு சேர்வார் பாரினில் பல பாடுகள் பட்ட பரிசுத்தர் பறந்தே போவார்

2ம் சரணம்

கண்ணிமைப் பொழுதில் மறுரூபமாகியே விண்ணில் மறைந்திடுவோமே மத்திய வானில் சுத்தர்கள் கூடி மகிழ்ந்து கொண்டாடிடுவோமே

3ம் சரணம்

காலையோ மாலையோ வருவார் எவ்வேளையோ நாளை யாரும் அறியோமே இன்று வந்தாலும் சென்றிட நாமும் இகத்தில் ஆயத்தங் கொள்வோமே

4ம் சரணம்

கர்த்தரைக் கண்டிட கவலைகள் தீர்ந்திடும் கண்ணீர் மாறி களிப்போமே இன்னல் துன்பங்கள் யாதும் அங்கில்லை இளைப்பாறுதல் பெற்று வாழ்வோம்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.