♪♫
TA-1344
Tamil
Ellam neer than
Ellam neer than
0
views
பல்லவி
எல்லாம் நீர்; இயேசுவே என்னுயிரும் நீர்; இயேசுவே
1ம் சரணம்
என் வாழ்வும் நீர்; இயேசுவே பொல்லாத உலகில் பொருளேதும் வேண்டாம் பரம் பொருள் நீர்; இயேசுவே
2ம் சரணம்
பாவியாய் நான் அலைந்தேன் பாதை தடுமாறினேன் (2) பாவ உலகில் பாவியை மீட்க பரிகாரம் நீர்; இயேசுவே
3ம் சரணம்
திக்கற்று நான் அலைந்தேன் தீமையை நான் மறந்தேன் (2) தாவீதின் வேரும் தேவமைந்தனும் தயவும் நீர்; இயேசுவே
4ம் சரணம்
மதியினை நான் இழந்தேன் மனம் நொந்து நான் அழுதேன் (2) மன்னாதி மன்னன் மனதுருகும் மனுமகன் நீர்; இயேசுவே