Ellam Umakkaaga
Ellam Umakkaaga
எல்லாம் யேசுவே, - எனக்கெல்லாம் மேசுவே. தொல்லைமிகு மிவ்வுலகில் துணை யேசுவே.
ஆயனும் சகாயனும் நேயனும் உபாயனும், நாயனும் எனக்கன்பான ஞானமண வாளனும், எல்லாம் யேசுவே, - எனக்கெல்லாம் மேசுவே. தொல்லைமிகு மிவ்வுலகில் துணை யேசுவே.
தந்தைதாய் இனம்ஜனம் பந்துளோர் சிநேகிதர், சந்தோட சகலயோக சம்பூரண பாக்கியமும், எல்லாம் யேசுவே, - எனக்கெல்லாம் மேசுவே. தொல்லைமிகு மிவ்வுலகில் துணை யேசுவே.
கவலையில் ஆறுதலும் கங்குலிலென் ஜோதியும், கஷ்டநோய்ப் படுகையிலே கைகண்ட ஒளஷதமும், எல்லாம் யேசுவே, - எனக்கெல்லாம் மேசுவே. தொல்லைமிகு மிவ்வுலகில் துணை யேசுவே.
போதகப் பிதாவுமென் போக்கினில் வரத்தினில்; ஆதரவு செய்திடுங் கூட்டாளியுமென் தோழனும், எல்லாம் யேசுவே, - எனக்கெல்லாம் மேசுவே. தொல்லைமிகு மிவ்வுலகில் துணை யேசுவே.
அணியும் ஆபரணமும் ஆஸ்தியும் சம்பாத்யமும், பிணையாளி மீட்பருமென் பிரிய மத்தியஸ்தனும், எல்லாம் யேசுவே, - எனக்கெல்லாம் மேசுவே. தொல்லைமிகு மிவ்வுலகில் துணை யேசுவே.
ஆன ஜீவ அப்பமும் ஆவலுமென் காவலும், ஞானகீதமும் சதுரும் நாட்டமும் கொண்டாட்டமும், எல்லாம் யேசுவே, - எனக்கெல்லாம் மேசுவே. தொல்லைமிகு மிவ்வுலகில் துணை யேசுவே.