TA-1346
Tamil

எல்லாம் யேசுவே, - எனக்கெல்லாம் மேசுவே.

Ellam yesuvae

16
views
பல்லவி

எல்லாம் இயேசுவே – எனக்கெல்லா மேசுவே தொல்லைமிகு மிவ்வுலகில் – தோழர் யேசுவே

1ம் சரணம்

ஆயனும் சகாயனும் நேயனும் உபாயனும் நாயனும் எனக்கன்பான ஞானமண வாளனும்

2ம் சரணம்

தந்தை தாய் இனம்ஜனம் பந்துளோர் சிநேகிதர் சந்தோட சகலயோக சம்பூரண பாக்யமும்

3ம் சரணம்

கவலையில் ஆறுதலும் கங்குலிலென் ஜோதியும் கஷ்டநோய்ப் படுக்கையிலே கைகண்ட அவிழ்தமும்

4ம் சரணம்

போதகப் பிதாவுமென் போக்கினில் வரத்தினில் ஆதரவு செய்திடுங் கூட்டாளிமென் தோழனும்

5ம் சரணம்

அணியும் ஆபரணமும் ஆஸ்தியும் – சம்பாத்யமும் பிணையாளியும் மீட்பருமென் பிரிய மத்தியஸ்தனும்

6ம் சரணம்

ஆன ஜீவ அப்பமும் ஆவலுமென் காவலும் ஞானகீதமும் சதுரும் நாட்டமும் கொண்டாட்டமும்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.