TA-1348
Tamil

எல்லோரும் கூடுங்கள் உன்னதன்

Ellorum kudungal

15
views
பல்லவி

எல்லோரும் வாருங்கள் ஒன்றாக கூடுங்கள் பரலோக ராஜாவை வாழ்த்துவோம் இந்த பூமியெல்லாம் பரலோகமாக்குவோம் வாருங்கள் ஒன்றாய் கூடுங்கள் பரலோக ராஜாவை வாழ்த்துவோம் அல்லேலூயா இந்த பூமியெல்லாம் பரலோகமாக்குவோம் நம்ம இந்தியாவை பரலோகமாக்குவோம்

1ம் சரணம்

காலம் இனி செல்லாது தேவ கோபம் நெருங்குது பூமியின் குடிகளே வாருங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபமாக இருக்குது மனம் திரும்பி எல்லோரும் வாருங்கள்

2ம் சரணம்

எதிரியான சைத்தானை தேவனின் வார்த்தை கொண்டு முற்றிலுமாய் அவனை தோற்கடிப்போம் ஆட்டுக்குட்டி இரத்தத்தாலும் சாட்சியின் வசனத்தாலும் முற்றிலுமாய் அவனை தோற்கடிப்போம்

3ம் சரணம்

மரண இருள் தேசத்திலே குடியிருக்கும் யாவர் மேலும் நீதியின் சூரியன் உதித்து விட்டான் மரணத்தை ஜெயித்தவராம் மகிமையின் ராஜாவாம் இயேசுவை நோக்கியே வாருங்கள்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.