போகுமிடமெல்லாம் கூடயிருந்து
Elunthu bethelukku
எழுந்து கட்டுவோம் வாருங்கள் இந்த நல்ல வேலைக்கு எழுந்து கட்டுவோம் வாருங்கள் இந்த மாபெரும் சேவைக்கு பரலோகத்தின் தேவன் நம்மோடுண்டு காரியம் வாய்த்திடச் செய்திடுவார் (2) பெரியவர் நம் தேவனன்றோ மாறாதவர் நம் இயேசுவன்றோ (2)
எதிரியின் கண்ணிகள் தந்திரங்கள் யூத இராஜ சிங்கம் முன் நிற்காதே (2) எல்லாவற்றாலும் எல்லாவற்றையும் (2) நிரப்பிடும் எல்ஷடாய் நமக்கு உண்டே (2)
தொபியாவின் தொல்லைகள் எழும்பினாலும் சன்பலாத்தின் சவால்கள் எதிர்த்திட்டாலும் (2) உபவாசிப்போம் ஜெபத்திடுவோம் (2) நன்மையாய் முடித்திடும் யெகோவா உண்டே (2)
கர்த்தர் நமக்காய் யுத்தம் செய்வார் நம் காரியம் கைகூடி வரப்பண்ணுவார் (2) விசாரப்படோம் கவலைப்படோம் (2) இயேசுவில் மகிழ்ச்சியே நமது பெலன் (2)
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.