TA-1354
Tamil

எழுந்து கட்டுவோம் வாருங்கள்

Elunthu kattuvom

14
views
பல்லவி

எம் உயர்ந்த வாசஸ்தலமதுவே எம் பூரண சீயோனே கன்மலையின் மேலே கழுகுபோல் உன்னதத்தில் வாழ்வோம் - இயேசு பக்தர்களே ஜெயம் பெற்றே பிதா முகம் காண்போம்

1ம் சரணம்

ஞானக் கன்மலையே கிறிஸ்தேசு எம் அரணே வான சீயோனிலே அவர் ஆவியால் பிறந்தோம் ஏழு தூண்களுடன் திட அஸ்திபாரமுடன் ஏசுவின் மேல் நின்ற வீடாய் நாம் இலங்கிடுவோம்

2ம் சரணம்

அன்பின் பூரணமே அதிலே பயமில்லையே அன்பர் ஏசுவிடம் அதை நாடி பெற்றிடவே ஆவியால் நிறைந்தே அவர் அன்பிலே நடந்தே ஆ! பேரின்பம் ஆத்ம வாழ்வில் ஆனந்தங்கொள்வோம்

3ம் சரணம்

மா சமாதானமே விசுவாச நம்பிக்கையே மா பரிசுத்தமே மரணத்தின் பாடுகளே தேவ சாயலுமே நம்மில் பூரணம் அடைய தூய வாழ்வை நாடி நாம் முன்னேறியே செல்வோம்

4ம் சரணம்

ஓட்டமே ஜெயமாய் நாமும் ஓடியே முடிக்க ஒவ்வொரு தினமும் புதிய பெலனடைவோம் பாவ சாபங்களும், புவி ஆசையும் ஜெயித்தோர் பாழுலகை வேகம் தாண்டி அக்கரை சேர்வோம்

5ம் சரணம்

வாலையும் சுழற்றி வலுசர்ப்பம் தோன்றிடுதே வீர ஆண்பிள்ளையை விழுங்க வகை தேடுதே வான அக்கினியால் அதை தீக்கொளுத்திடுவோம் வல்லமை மிகுந்த கர்த்தர் இயேசு நாமத்திலே

6ம் சரணம்

வானங்கள் வழியே இறங்கி பரன் வருவார் வாஞ்சையாய் சபையாய் அன்று இயேசுவை சந்திப்போம் மீட்பின் நாள் நெருங்க தலைகள் உயர்த்திடுவோம் மத்திய வான விருந்தில் பங்கடைந்திடுவோம்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.