♪♫
TA-1368
Tamil
என் இதயம் யாருக்குத் தெரியும்
En Idhayam Yaarukku
0
views
பல்லவி
என் இதயம் யாருக்கு தெரியும் என் வேதனை யாருக்கு புரியும் என் தனிமை என் சோர்வுகள் யார் என்னை தேற்றக் கூடும் – 2
1ம் சரணம்
நெஞ்சின் நோகங்கள் அதை மிஞ்சும் பாரங்கள் தஞ்சம் இன்றியே உள்ளம் ஏங்குதே – 2
2ம் சரணம்
சிறகு ஒடிந்த நிலையில் பறவை பறக்குமோ வீசும் புயலிலே படகும் தப்புமோ – 2
3ம் சரணம்
மங்கி எரியும் விளக்கு பெருங்காற்றில் நிலைக்குமோ உடைந்த உள்ளமும் ஒன்று சேருமோ – 2
4ம் சரணம்
அங்கே தெரியும் வெளிச்சம் கலங்கரை தீபமோ இயேசு ராஜனின் முகத்தின் வெளிச்சமே – 2 என் இதயம் ஏசுவுக்கு தெரியும் என் வேதனை ஏசுவுக்கு புரியும் என் தனிமையில் என் சோர்வினில் அவர் என்னை தேற்றக் கூடும் – 2