TA-1372
Tamil

என் களிப்புக்குக் காரணம்,

En Kalippukku Kaaranam

0
views
பல்லவி

என் கன்மலை என் கோட்டையும் என் துருகமும் நீரே நான் நம்பிடும் என் நம்பிக்கை என் அடைக்கலமும் நீரே – 2 போற்றுவேன் உம்மை வாழ்த்துவேன் உம்மை வணங்குவேன் ராஜா – 2

1ம் சரணம்

அருமையானவர் நீரே நீரே இனிமையானவர் நீரே நீரே இன்பமானவர் நீரே நீரே மதுரமனவர் நீரே நீரே – 2

2ம் சரணம்

சரோனின் ரோஜா நீரே நீரே லீலி புஸ்பம் நீரே நீரே ஆலோசனை கர்த்தர் நீரே நீரே சமாதான பிரபு நீரே நீரே – 2

3ம் சரணம்

பூரண அழகின் தேவன் நீரே பதினாயிரங்களின் சிறந்தோர் நீரே நீரே ஆத்ம நேசர் நீரே நீரே என்னை நேசிக்கும் இயேசு நீரே – 2