TA-1378
Tamil

என்மேல் நினைவானவர்

En Mael Ninaivaanavar

14
views
பல்லவி

என் மேய்ப்பர் நீர்தானையா எனக்கென்றும் குறைவேயில்லை (2) நான் ஏன் கலங்கணும் என் ஆயன் இருக்கையிலே (2)

1ம் சரணம்

நீதியின் பாதையில் நடத்திச் செல்கின்றீர் உம் மகிமை விளங்கும்படி (2) 2ஆத்துமா தேற்றுகின்றீர் ஆவி பொழிகின்றீர் புது உயிர் தருகின்றீர் (2)

2ம் சரணம்

எதிரிகள் கண்முன்னே வெற்றி தருகின்றீர் விருந்து படைக்கின்றீர்(2)

3ம் சரணம்

நிச்சயமாகவே வாழ்நாள் முழுவதும் உம் கிருபை பின் தொடரும்(2)

4ம் சரணம்

இருள்சூழ் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும் பயமில்லையே பயமில்லையே வசனமும் ஆவியும் தினமும் தேற்றுதையா(2)

5ம் சரணம்

தலையை எண்னையால் அபிஷேகம் செய்கின்றீர் பாத்திரம் நிரம்பி வழிகின்றது(2)

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.