♪♫
TA-1379
Tamil
En Maeypparae Iyaesaiyaa
En Maeypparae Iyaesaiyaa
0
views
பல்லவி
என் மனமே உன்னை மறப்பாரோ? தேவன் உன்னை மறந்து போவாரோ ?-2 துயரங்கள் எல்லாமே மறைய செய்வாரே ஆனந்த தைலத்தை உன் மேல் பொழிவாரே-2 துதிக்க வைப்பாரே உன்னை அலங்கரிப்பாரே இடிந்து போனதெல்லாம் உயிர்த்தெழும்ப செய்வாரே-2
1ம் சரணம்
வாதிப்பின் சத்தம் கேட்ட உன் எல்லை எல்லாமே வர்த்திப்பின் பாடல் சத்தம் இன்று முதல் கேட்குமே-2 குறுகிப்போவதில்லை நீ சிறுமை அடைவதில்லை-2-துதிக்க சீர்ப்படுத்தினாரே ஸ்திரப்படுத்தினாரே பலப்படுத்தினாரே நிலை நிறுத்தினாரே சீர்ப்படுத்தி உன்னை உயர்த்தி வைத்த தேவன் இந்தப்புதிய ஆண்டில் அலங்கரிப்பாரே-2
2ம் சரணம்
விசாரிக்க யாருமின்றி தள்ளுண்ட உன்னையே ஆரோக்கியம் வரப்பண்ணி ஆளுகை தருவாரே-2 இடிந்த அலங்கத்தை (அலங்கம் உன்னை) அவர் அரண்மனை ஆக்கிடுவார்-2-துதிக்க