TA-1389
Tamil

என் மீட்பரே யாவே ரோஹி

En Meetpare Yawah

0
views
1ம் சரணம்

என் மேய்ப்பர் இயேசு கிறிஸ்துதான், நான் தாழ்ச்சியடையேனே; ஆட்கொண்டோர் சொந்தமான நான் குறையடைகிலேனே.

2ம் சரணம்

ஜீவாற்றில் ஓடும் தண்ணீரால் என் ஆத்மத் தாகம் தீர்ப்பார்; மெய் மன்னாவாம் தம் வார்த்தையால் என் மேய்ச்சல் எனக்கீவார்.

3ம் சரணம்

நான் பாதை விட்டு ஓடுங்கால் அன்பாகத் தேடிப் பார்ப்பார்; தோள்மீதில் ஏற்றிக் காப்பதால் மகா சந்தோஷங்கொள்வார்.

4ம் சரணம்

சா நிழல் பள்ளத்தாக்கிலே நான் போக நேரிட்டாலும், உம் அன்பின் கோலைப் பற்றவே, அதே என் வழி காட்டும்.

5ம் சரணம்

இவ்வேழைக்கும் ஓர் பந்தியை பகைஞர்க்கெதிர் வைத்தீர்; உம்மாவியால் என் சிரசை தைலாபிஷேகம் செய்வீர்.

6ம் சரணம்

என் ஆயுள் எல்லாம் என் பாத்திரம் நிரம்பி வழிந்தோடும்; ஜீவாற்றின் நீரால் என்னுள்ளம் நிறைந்து பொங்கிப் பாயும்.

7ம் சரணம்

என் ஜீவ காலம் முற்றிலும் கடாட்சம் பெற்று வாழ்வேன்; கர்த்தாவின் வீட்டில் என்றைக்கும் நான் தங்கிப் பூரிப்பாவேன்.