TA-1390
Tamil

என் மேல் நினைவாய் இருப்பவரே

En Mel Ninaivaai

15
views
பல்லவி

என் மேல் நினைவாக இருப்பவரே உள்ளங்கைகளில் வரைந்தவரே தாயின் கருவினில் அழைத்தவரே இதுவரை என்னை நடத்தினீரே (2) எந்தன் நினைவுகள் எல்லாம் சிறியதையா உந்தன் நினைவுகள் எல்லாம் பெரியதையா (2) உங்க அன்பு பெரியது உங்க அழைப்பு பெரியது உங்க திட்டம் பெரியது உங்க மகிமை பெரியது (2)

1ம் சரணம்

படுகுழியில் என்னை தள்ளினார்கள் நீரோ என்னை உயர்த்தினீரே (2) தள்ளப்பட்ட கல்லான என்னையுமே மூளைக்கு தலை கல்லாய் உயர்த்தினீரே (2) நன்றி ஐயா உமக்கு நன்றி ஐயா உயிருள்ள நாளெல்லாம் நன்றி ஐயா துதித்திடுவேன் உம்மை உயர்த்திடுவேன் நன்றியுள்ள உள்ளதோடு ஆராதிப்பேன்

2ம் சரணம்

ஒரு நொடி பொழுதும் விலகாதவர் வாழ்நாள் முழுவதும் கைவிடாதவர் (2) வாலாக்காமல் என்னை தலையாக்கினீர் கீழக்காமல் என்னை மேல் ஆக்கினீர் (2) நன்றி ஐயா உமக்கு நன்றி ஐயா உயிருள்ள நாளெல்லாம் நன்றி ஐயா துதித்திடுவேன் உம்மை உயர்த்திடுவேன் நன்றியுள்ள உள்ளதோடு ஆராதிப்பேன் (2)

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.