♪♫
TA-2229
Tamil
எனக்காய் ஜீவன் விட்டவரே
Enakkai Jeevan Vittavarae
19
views
பல்லவி
எனக்காய் ஜீவன் விட்டவரே என்னோடிருக்க எழுந்தவரே என்னை என்றும் வழி நடத்துவாரே என்னை சந்திக்க வந்திடுவாரே இயேசு போதுமே இயேசு போதுமே எந்த நாளிலுமே எந்நிலையிலுமே எந்தன் வாழ்வினிலே இயேசு போதுமே
1ம் சரணம்
பிசாசின் சோதனை பெருகிட்டாலும் சோர்ந்து போகாமல் முன் செல்லவே உலகமும் மாமிசமும் மயங்கிட்டாலும் மயங்கிடாமல் முன் செல்லவே
2ம் சரணம்
புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார் அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார் ஆத்துமாவை நிதம் தேற்றிடுவார் மரணப் பள்ளத்தாக்கில் காத்திடுவார்
3ம் சரணம்
மனிதர் என்னைக் கைவிட்டாலும் மாமிசம் அழுகி நாறிட்டாலும் ஐஸ்வரியம் யாவும் அழிந்திட்டாலும் ஆகாதவன் என்று தள்ளி விட்டாலும்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.