TA-1416
Tamil

கர்த்தர் உன்னை

End Blessing

11
views
பல்லவி

என்றைக்கும் உள்ளவரே சிருஷ்டிப்பின் கர்த்தரே சர்வ வல்லவர்... ஆவியானவராலே உற்பத்தியானவர் இயேசு என் இரட்சகர்... பிதா குமாரன் ஆவி விசுவாசிக்கின்றேன் திரியேக தேவனையே விசுவாசிக்கின்றேன் மகிமையில் எழுவோம் என்று விசுவாசிக்கின்றேன் இயேசுவின் நாமத்தில் விசுவாசிக்கின்றேன்-2

1ம் சரணம்

சிலுவையில் இரத்தம் சிந்தி என் நியாயாதிபதி மன்னிப்பு தந்தீர்... பாதாளம் இறங்கின போதும் உயிர்த்து எழுந்து உன்னதம் உயர்ந்தீர்-பிதா குமாரன் ஆவி நம்புவேன் உம்மையே உயிர்த்தெழுந்தீர் என்பதையே இயேசுவே ஆண்டவர் நம்புவேன்-2

2ம் சரணம்

பொதுவான பரிசுத்த சபையும் பரிசுத்தவான்களின் ஐக்கியம் நித்திய ஜீவனையும் விசுவாசிக்கின்றேன் மறுபடியும் கிறிஸ்து வருவார் மேகங்கள் மீதினில் இயேசுவின் நாமத்தில் விசுவாசிக்கின்றேன்-2 இயேசுவின் நாமத்தில் விசுவாசிக்கின்றேன்-3

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.