TA-1421
Tamil

எங்களுக்குள்ளே வாசம் செய்யும்

Engalukule vasam seiyum

13
views
பல்லவி

எங்கே சுமந்து போகிறீர் சிலுவையை நீர் எங்கே சுமந்து போகிறீர்

1ம் சரணம்

எங்கே சுமந்து போறீர் இந்தக் கானலில் உமது அங்கம் முழுதும் நோக ஐயா என் ஏசுநாதா

2ம் சரணம்

தோளில் பாரம் அழுந்த தூர்க்கப் பெலம் இல்லாமல் தாளுந் தத்தளிக்கவே தாப சோபம் உற நீர்

3ம் சரணம்

வாதையினால் உடலும் வாடித் தவிப்புண்டாக பேதம் இல்லாச்சீமோனும் பின்னாகத் தாங்கிவர

4ம் சரணம்

தாயார் அழுதுவர சார்ந்தவர் பின் தொடர மாயம் இல்லாத ஞான மாதர் புலம்பி வர

5ம் சரணம்

வல்ல பேயைக் கொல்லவும் மரணந்தனை வெல்லவும் எல்லை இல்லாப் பாவங்கள் எல்லாம் நாசமாகவும்

6ம் சரணம்

மாசணுகாத சத்திய வாசகனே உமது தாசர்களைக் காக்கவும் தாங்காச் சுமையை எடுத்து

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.