TA-1423
Tamil

என்ன ஒரு பாசம்

Enna oru paasam

13
views
பல்லவி

என்ன பாக்கியம் எவர்க்குண்டு இந்தச் சிலாக்கியம் விண்ணவரும் புவிமேவும் முனிவர்களும் மன்னவருங் காணா மகிபனை யான் கண்டேன்

1ம் சரணம்

வானகந் தானோ அல்லதிது வையகந் தானோ ஆனகம் சென்று எழுந்த அரும்பொருள் கானகந் தன்னில் என் கையில் அமர்ந்தது

2ம் சரணம்

போதும் இவ்வாழ்வு பரகதி போவேன் இப்போது ஏதேன் என்ற பரதீசும் வந்திட்டது எண்ணில்லாத செல்வம் என் கையில் கிட்டுது

3ம் சரணம்

சாமியைக் கண்டேன் மகானந்தம் சாலவுங்கொண்டேன் காமரு தேங்கனி வாய்கள் துடிப்பதும் கண்ணும் மனமும் களிக்க விழிப்பதும்

4ம் சரணம்

அன்னமும் நீயே கிடைத்தற்கருஞ் சொன்னமும் நீயே மின்னுறு மேகத் திருக்கை துறந்தையோ மேதினி தன்னை ரட்சிக்கப் பிறந்தையோ

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.