TA-1429
Tamil

என்னை அழைத்தவரே

Ennai Azhathavarae Ennai Thottavarae

0
views
பல்லவி

தமது ஐஸ்வரியத்தின்படியே எனது குறைவை நிறைவாக்கும் இயேசுவை விசுவாசித்தே - தேவ மகிமையைக் காண்பேன் - நான்

1ம் சரணம்

நான் சோம்பலின் அப்பம் புசியாமல் நான் சோர்ந்து தரித்திரமடையாமல் உற்சாகமாக உழைத்திடுவேன் உண்மை ஊழியம் செய்திடுவேன் தேவனை அதிகாலை தோறும் தேடி கண்டடைவேன் - நான்

2ம் சரணம்

நான் கர்த்தருக்குக் காத்திருந்தே நான் புதுபெலனை அடைந்திடுவேன் கழுகு போல செட்டைகளை அடித்து நான் எழும்பிடுவேன் நடந்திட்டாலும் ஓடினாலும் சோர்ந்திடமாட்டேன் - நான்

3ம் சரணம்

நான் இயேசுவை மிக நேசிக்கிறேன் நான் அவருக்காகவே ஜீவிக்கிறேன் அநேக எதிர்ப்புகள் மத்தியிலும் அதிக ஊழியம் செய்திடுவேன் என்னை அழைத்தவர் உண்மையுள்ளவர் என் பட்சம் நிற்பார் - இயேசு

4ம் சரணம்

என் இயேசு சீக்கிரம் வருவாரே நான் அவருக்காகவே காத்திருப்பேன் அவனவன் கிரியைபடியே அவர் அருளும் பிரதிபலனே ஆண்டவர் வரும்போது தம்முடன் கொண்டு வருவாரே - இயேசுptMஎன்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலன் உண்டு 1 நான் எந்த நிலைமையில் இருந்தாலும் நான் மன ரம்மியமாய் இருக்கின்றேன் பட்டினியாயிருந்தாலும் பரிபூரணம் அடை