♪♫
TA-1434
Tamil
என்னை பெயர் சொல்லி அழைத்தவரே
Ennai Peyar Solli Azaithavarae
0
views
பல்லவி
என்னை தேடி வந்த மாநேசரே எல்ரோயி என்னை காண்பவரே – 2 உம்மை துதிப்பேன் உம்மை புகழ்வேன் உம்மை பாடி மகிழ்ந்திடுவேன் – 2
1ம் சரணம்
மாறாத அன்பாலே என்னை நீர் இழுத்துக்கொண்டீர் – 2 தூரம் போன சோரப்பிள்ளை-என்று என்னை நீர் தள்ளவில்லை – 2
2ம் சரணம்
என்னையும் கண்ணோக்கி என் எளிமையில் உயர்த்தினீரே – 2 உந்தன் கண்களில் தயவு கிடைக்க என்னில் நீர் என்ன கண்டீர் – 2
3ம் சரணம்
பாவங்கள் பாராமல் என்னை நீர் தெரிந்து கொண்டீர் – 2 எந்தன் இரட்டை களைந்து போட்டீர் உம் மகிழ்வாலே இடைக்கட்டினீர் – 2