TA-1436
Tamil

எனக்கா இத்தன கிருபை

Ennakka Ithana Kiruba

13
views
பல்லவி

எனக்கேன் இனி பயமே எந்தன் இயேசு என் துணையே என் துன்ப நேரத்திலே இயேசுவே என்னோடிருப்பார் கடந்த வாழ் நாட்களெல்லாம் கர்த்தரே என்னை சுமந்தார் கண்ணீர் யாவையும் துடைத்தார்

1ம் சரணம்

உண்மையாய் என்னையும் நேசித்தார் உள்ளங்கையில் என்னை வரைந்தார் அவர் அறியாதொன்றும் வந்ததில்லை அவரையே சார்ந்து கொண்டேன்

2ம் சரணம்

கர்த்தரோடிசைந்தே நடந்தேன் கிருபை சமாதானம் ஈந்தார் விசுவாசத்தால் நானும் பிழைத்ததால் விரும்பி என்னை அணைத்தார்

3ம் சரணம்

யுத்தங்கள், துன்பங்கள் சந்தித்தும் யோர்தான் நதி புரண்டு வந்தும் எலியாவின் தேவன் என் ஜெபங்களை ஏற்று பதில் அளித்தார்

4ம் சரணம்

இத்தனை அற்புத நன்மைகள் கர்த்தர் செய்ததை நினைத்திடுவேன் இதுவரை வழிகாட்டி நடத்தினார் இன்னமும் காத்திடுவார்

5ம் சரணம்

உலகம் முடியும் வரையும் உந்தனோடிருப்பேன் என்றவர் மகிமையில் சேர்ப்பாரே நம்பிக்கையில் மேன்மை பாராட்டுகிறேன்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.