TA-1454
Tamil

நீர் தேவை ஆ நீர் தேவை

Eppothum neer

18
views
பல்லவி

எப்போதும் நீர் என் அருகினிலே இருப்பதை உணர்கிறேன் ஆனாலும் உம்மை மறந்துவிட்டு அலைகிறேன் இயேசுவே (2) புதிதாய் இனிதாய் எந்தன் வாழ்வும் நிலையாய் மாறும் தருணம் இனிதான் வந்திடுமோ ?

1ம் சரணம்

அனலாய் சில காலம் குளிராய் சில காலம் எனையே நான் நொந்து வாழ்ந்தேன் பல காலம்(2) ஆடையில் உள்ள வெண்மை உள்ளில் இல்லையே வார்த்தைகள் சொல்லும் உண்மை வாழ்வில் இல்லையே (2) என்னைக் கண் பாரும் இயேசுவே

2ம் சரணம்

யாவும் வெளிவேஷம் இல்லை விசுவாசம் வாழ்வு ஆனது தோஷம் இல்லை சந்தோஷம் (2) உப்பை போல வாழும் வாழ்வில் சாரம் இல்லையே தீபம் போல வாழ வேண்டி தீயில் வேகிறேன்(2) அன்பின் கரம் நீட்டும் இயேசுவே

3ம் சரணம்

எப்போதும் நீர் என் அருகினிலே இருப்பதை உணர்கிறேன் ஆனாலும் உம்மை மறந்துவிட்டு அலைகிறேன் இயேசுவே (2) புதிதாய் இனிதாய் எந்தன் வாழ்வும் நிலையாய் மாறும் தருணம் இனிதான் வந்திடுமோ ? எப்போதும.. நீர் என் அருகினிலே ஆனாலும.. உம்மை மறக்கிறேன்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.