TA-1456
Tamil

இருள் சூழ்ந்த லோகத்தில்

Erul sooltha logathil

17
views
பல்லவி

இருளினில் பகலனவாய் தோன்றிய எங்கள் தேவனே மனிதனின் மாசினை அகற்றிடும் இயேசு ராஜனே ஈசாயின் மரத் துளிராய் தாவிதின் வேர் கிளையாய் கன்னியின் மைந்தனாய் யூத ராஜ சிங்கம் பிறந்தார் பிறந்தார் பிறந்தார்-உலக இரட்சகர் பிறந்தார்

1ம் சரணம்

பாவத்தின் வேரை அறுத்திட சாபத்தின் நுகத்தடி முறித்திட மானிட உருவாய் அவதரித்தார் இயேசு கிறிஸ்து வந்துதித்தார்

2ம் சரணம்

சரித்திரம் தனை பிரித்திட நியாய பிரமாணம் நிறைவேற்றிட தீர்க்கர் உரைத்தது நிறைவேற நீதியின் சூரியன் வந்துதித்தார்.

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.