TA-1461
Tamil

எத்தனை நாவால

Eththanai Naavaal Thuthipean

0
views
பல்லவி

எத்தனை திரள் என் பாவம் , என் தேவனே! எளியன்மேல் இரங்கையனே நித்தம் என் இருதயம் தீயதென் பரனே ; நிலைவரம் எனில் இல்லை ; நீ என் தாபரமே

1ம் சரணம்

பத்தம் உன் மேல் எனக்கில்லை என்பேனோ பணிந்திடல் ஒழிவேனோ? சுத்தமுறுங் கரம்கால்கள் , விலாவினில் தோன்றுது காயங்கள் , தூய சிநேகா !

2ம் சரணம்

என்றன் அநீதிகள் என் கண்கள் முனமே இடைவிடாதிருக்கையிலே , உன்றன் மிகுங் கிருபை , ஓ மிகவும் பெரிதே உத்தம மனமுடையோய் , எனை ஆளும் !

3ம் சரணம்

ஆயங் கொள்வோன்போல் , பாவ ஸ்திரீபோல் அருகிலிருந்த கள்ளன் போல் , நேயமாய் உன் சரண் என் வணங்கினேன் நீ எனக்காகவே மரித்தனை , பரனே !

4ம் சரணம்

கெட்ட மகன்போல் துட்டனாய் அலைந்தேன் கெடு பஞ்சத்தால் நலிந்தேன் ; இட்டமாய் மகன் எனப் பாத்திரன் அவன் நான் எனை ரட்சித்திடல் உன்றன் நிமித்தமே , அப்பனே !