TA-1462
Tamil

எத்தருணத்தில் உயிர் எவ்வழி பிரியுமோ

Eththarunathil Uyir Vazhi Piriyumo

16
views
பல்லவி

இது அதிசயமே எனக்கானந்தமே இன்ப பரலோகம் துறந்தெனக்காய் இகத்தில் இயேசுவே மனுவாய் உதித்தார்

1ம் சரணம்

விண்ணையும் துறந்து இம்மண்ணுலகில் என்னையும் எண்ணியே தம் மனதில் தாழ்மையின் ரூபமே தாம் எடுத்து தயாபரனாய்த் தோன்றினார் - தேவ

2ம் சரணம்

மானிடர் மன இருள் நீக்கிடும் மெய் மா ப்ரபையோ டிலங்கும் மகிபன் மன்னுயிர் மீட்கவே தன்னுயிரைத் தந்தாரே விந்தையிதே - கர்த்தர்

3ம் சரணம்

சமாதானப் பிரபுவாய் ஜெகத்தில் வந்தே சமாதானம் எனதுள்ளமே பொழிந்தார் நன்றியோடே நானும் பாடிடுவேன் நற்பரன் இயேசுவையே - எந்தன்

4ம் சரணம்

பறந்திடும் பறவைக்கும் கூடு உண்டே பதுங்கிட நரிக்கும் ஓர் குழியுமுண்டே இயேசுவுக்கோ தலைசாய்த்திடவோ எங்குமோர் ஸ்தலமுமில்லை - பூவில்

5ம் சரணம்

சாந்தமும் தாழ்மையும் நீதியுமே சிறப்புடன் விளங்கிடுதே அவரில் இந்நுகமே எனக்கெந் நாளுமே சொந்த மென்றேற்றிடுவேன்-என்றும்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.