TA-1466
Tamil

ஏழை மனுவுருவை எடுத்த

Ezhai Manuvuruvai Eduththa

0
views
பல்லவி

எளியனுக்கிரங்குவாயே இறைவன் நீயே – எளியனுக் கிரங்குவாயே. மறை விளக்கி இந்நரரை மீட்க இம் மானுவேல் எனும் நாமம் மேவியே தரையில் வந்தவ தரித்த ஏழைகள் தாதா ஏசுநாதா என்.- இறை

1ம் சரணம்

ஆண்டவர்கள் போற்றும் விண்ணோனே – எங்கள் ஆதரவாய் உற்ற கோனே நல்ல தொண்டர்களுக் கருள் புரியும் நன் மனத் தூயா அன்பர் நேயா என் -இறை

2ம் சரணம்

நன்று திகழ் பெரியோனே – திவ்ய ஞானம் எனும் பெயரோனே இயல் அன்றும் இன்றும் ஒன்றுபோல உறும் ஐயா ஒளிர் மெய்யா என்-இறை

3ம் சரணம்

எங்கும் நிறைந்த வல்லோனே – அன்பர்க் கின்பு செய்கின்ற நல்லோனே மிக இங்கிதமாய் உனை ஏத்தித் தொழ அருள் ஈவாய் க்ருபை ஆவாய் என்-இறை