♪♫
TA-1478
Tamil
இயேசு ராஜன் உயிர்த் தெழுந்தார் அல்லேலூயா
Geetham Geetham Jaya
19
views
பல்லவி
கீதம் கீதம் ஜெய ஜெய கீதம் கை கொட்டிப் பாடிடுவோம் இயேசு ராஜன் உயிர்த்தெழுந்தார் அல்லேலூயா ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம்
1ம் சரணம்
பார் அதோ கல்லறை மூடினப் பெருங்கல் புரண்டுருண்டோடுது பார் அங்கு போட்ட முத்திரை காவல் நிற்குமோ தேவ புத்திரர் சந்நிதிமுன்
2ம் சரணம்
வேண்டாம் வேண்டாம் அழுதிட வேண்டாம் ஓடி உரைத்திடுங்கள் தாம் கூறின மாமறை விட்டனர் கல்லறை போங்கள் கலிலேயாவுக்கு
3ம் சரணம்
வாசல் நிலைகளை உயர்த்தி நடப்போம் வருகிறார் ஜெய வீரன் நாம் மேள வாத்தியம் கைமணி பூரிகை எடுத்து முழங்கிடுவோம்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.