TA-1479
Tamil

ஞான மணாளரே,

Gnana Manalarae

13
views
பல்லவி

ஞான சுவிசேஷமே நன்மை தரும் நேசமே ஞான உபதேசமே, வளரும் விசுவாசமே, – ஞான

1ம் சரணம்

சத்திய வாக்கியமே, சந்தோச பாக்கியமே, புத்தியா ரோக்கியமே, புண்ணிய சிலாக்கியமே.

2ம் சரணம்

நீதிப் பிரசங்கமே, நிமலன் அருள் தங்கமே, சோதிமிகும் துங்கமே,[1] துதிபெருகும் பொங்கமே,[2]

3ம் சரணம்

அஞ்ஞானத்தை அழிக்கும், அலகையிடர் ஒழிக்கும், மெய்ஞ்ஞானத்தை அளிக்கும், விளங்கி என்றும் செழிக்கும்,

4ம் சரணம்

யேசுஅண்டையில் சேர்க்கும், எல்லா இடரும் நீக்கும், பேசும் பவத்தைப் போக்கும், பேதைமையோரைக் காக்கும்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.