யோர்தானும் செங்கடலும்
Inthamattum Katha Ebinesare
இந்தியர் யார்? இந்தியர் யார்? இந்தியர் யார்? இந்தியர் யார்? – (2)
ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவர் போராட்டம், வன்முறைக்கு உட்படாதவர் தேசத்தின் வளர்ச்சிகளை கெடுக்காதவர் அரசாங்க சட்டங்களை மீறாதவர் அவரே உண்மை இந்தியர்கள் உள்ளத்தில் தேச பக்தி கொண்டவர்கள்! – (2)
பலவந்தம் செய்து மதம் மாற்றமாட்டார் ஏமாற்றி கொள்கைகளை விற்கமாட்டார் பிறரின் உரிமைகளை தடுக்கமாட்டார் தேசத்தின் நல் எண்ணம் ஓங்கச் செய்வார் அவரே உண்மை இந்தியர்கள் உள்ளத்தில் தேச பக்தி கொண்டவர்கள்! – (2)
தேசத்தின் உடைமைகளை களவுசெய்யார் கருப்பு பணங்களை ஏற்கமாட்டார் கொள்ளை அடித்து குவிக்கமாட்டார் வரிகளில் வஞ்சம் செய்யமாட்டார் அவரே உண்மை இந்தியர்கள் உள்ளத்தில் தேச பக்தி கொண்டவர்கள்! – (2)
குறித்த நேரத்தில் வேலைக்குச் செல்வார் குறிப்பிட்ட கடமையில் தவறமாட்டார் லஞ்சம் எதுவும் வாங்கமாட்டார் சிபாரிசு, செல்வாக்கு நோக்கமாட்டார் அவரே உண்மை இந்தியர்கள் உள்ளத்தில் தேச பக்தி கொண்டவர்கள்! – (2)
சுத்தம் சுகாதாரம் பாதுகாப்பார் சாலை விதிகளை கடைப்பிடிப்பார் ஒளித்தும் மறைத்தும் ஒன்றும் செய்யமாட்டார் உண்மை பிரஜையாக செயல்படுவார் அவரே உண்மை இந்தியர்கள் உள்ளத்தில் தேச பக்தி கொண்டவர்கள்! – (2)
ஏழைகள், அகதிகள் நலம் தேடுவார் தான தர்மங்களில் பங்கெடுப்பார் விலங்குகள், பறவைகள் பாதுகாப்பார் தன்னைப்போல் பிறருக்கும் அன்பே செய்வார் அவரே உண்மை இந்தியர்கள்! உள்ளத்தில் தேச பக்தி கொண்டவர்கள்! – (2)