TA-1492
Tamil

இப்பூவினில் நம் இயேசுவை

Ippooviyil nam

15
views
பல்லவி

இப்போதும் எப்போதும் எல்லாவற்றிற்காகவும் தந்தையாம் கடவுளுக்கு துதிபலி செலுத்திடுவோம் துதிபலி அது சுகந்த வாசனை நன்றி பலி அது உகந்த காணிக்கை

1ம் சரணம்

எல்லா மனிதருக்கும் இரட்சிப்பு தருகின்ற தேவனின் கிருபையே பிரசன்னமானீரே துதிக்கிறேன் தூயவரே போற்றுகிறேன் புண்ணியரே

2ம் சரணம்

தீய நாட்டங்கள் உலகுசார்ந்தவைகள் வெறுக்கச் செய்தீரே வெற்றியும் தந்தீரே

3ம் சரணம்

நெறிகேடு அனைத்தினின்றும் மீட்பு தந்தீரய்யா நற்செயல் செய்வதற்கு ஆர்வம் தந்தீரய்யா

4ம் சரணம்

தேவ பக்தியுடன், தெளிந்த புத்தியோடு இம்மையில் வாழ்வதற்கு பயிற்சி தருகின்றீர்

5ம் சரணம்

சொந்த மகனாக தூய்மையாக்கிடவே உம்மையே பலியாக ஒப்படைத்தீர் சிலுவையிலே

6ம் சரணம்

மறுஜென்ம முழுக்கினாலும் புதிதாக்கும் ஆவியாலும் இரட்சித்துக் கழுவினீரே மிகுந்த இரக்கத்தினால்

7ம் சரணம்

நீதிமான் ஆக்கினீரே உமது கிருபையினால் நித்திய ஜீவன் தந்தீரே நிரந்தரப் பரிசாக

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.