TA-1494
Tamil

ஐயோ, வதைந்து நொந்த

Iraththam Kaayam Kuththum

0
views
பல்லவி

இரத்தத்தினாலே கழுவப்பட்டேன் பரிசுத்தமாக்கப்பட்டேன் – 2 மீட்கப்பட்டேன் திரு இரத்தத்தால் அலகையின் பிடியினின்று – நான் – 2 இரத்தம் ஜெயம் , இரத்தம் ஜெயம் இயேசுகிறிஸ்துவின் இரத்தம் ஜெயம் – 2

1ம் சரணம்

படைத்தவரே என்னை ஏற்றுக் கொண்டார் சிந்தப்பட்ட திரு இரத்தத்தால் – 2 பாவம் செய்யாத ஒரு மகனைப்போல பார்க்கின்றார் பரமபிதா – 2

2ம் சரணம்

என் சார்பில் தேவனை நோக்கி தொடர்ந்து கூப்பிடும் இரத்தம் – 2 அருள் நிறைந்த இறை அரியணையை துணிவுடன் அணுகிச் செல்வோம் – 2

3ம் சரணம்

போர்க்கவசம் என் தலைக்கவசம் இயேசுவின் திரு இரத்தம் – 2 தீய ஆவி(யும்) அணுகாது தீங்கிழைக்க முடியாது-எந்த – 2

4ம் சரணம்

சுத்திகரிக்கும் தூய்மையாக்கும் வாழ்நாளெல்லாம் தினமும் – 2 நன்மையான காரியங்கள் நமக்காய் பரிந்து பேசும் – 2

5ம் சரணம்

சாவுக்கேதுவான கிரியை நீக்கி பரிசுத்தமாக்கும் இரத்தம் – 2 ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியம் செய்வதற்கு – 2