♪♫
TA-1498
Tamil
வழியும் சத்தியமும் ஜீவனும் நானே
Isravele bhayapadathe
0
views
பல்லவி
இஸ்ரவேலே கர்த்தரை நம்பு – 2 இஸ்ரவேலே அவர் உன் துணையும் கேடகமானவர் – 2
1ம் சரணம்
புழுதியிலிருந்து தூக்கி விடுவார் குப்பையிலிருந்து உயர்த்திடுவார் – 2 பிரபுக்களோடும் ராஜாக்களோடும் உட்கார செய்பவர் உனக்கு உண்டு – 2
2ம் சரணம்
அவர் உன்னை விட்டு விலகுவதில்லை அவர் உன்னை என்றும் கைவிடுவதில்லை – 2 உள்ளங்கையில் வரைந்தவர் அவர் உன்னை என்றும் மறப்பதுமில்லை – 2
3ம் சரணம்
அக்கினி மீது நீ நடக்கும் போதும் ஆறுகளை நீ கடக்கும் போதும் – 2 அக்கினி பற்றாது ஆறுகள் புரளாது ஆண்டவர் உன்னோடு இருப்பதாலே -2